37 வயதான விஜேசிங்க அநுராதபுர மாவட்டம் ஹொரவபொதான,புளியன்கடவெல
எனும் கிராமத்தில் வதியும் ஒரு கூலித்தொழிலாளி.
மூளை நரம்பில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இவரின் மனைவி கடந்த ஒன்றறை ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
மனைவியின் மரணத்தின் பின் தனது ஊணமுற்ற மகளை பராமரிக்கவென மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டுவருகிறார் விஜேசிங்க.
சில நேரங்களில் மகளை தோளில் சுமந்த வண்ணம் விரகு வெட்டுதல்,வரப்பு கட்டுதல் போன்ற வேலைகளையும் செய்து வருகிறார்.
மகளை தனிமைபடுத்திவிடக்கூடாது என்பதற்க்காக அன்மையகாலங்களாக பிறரின் வயல் நிலங்களை யானைகளிடமிருந்து பாதுத்துக்காக்கும் காவல் வேலையை செய்து அதில் வரும் சொச்ச வருமானத்தின் மூலம் வாழ்ந்து வருகிறார்.
இதற்க்காகவே மரத்தில் பரன் அமைத்து ஊணமுற்ற மகளுடன் மரத்திலேயே குடியிருக்கிறார் விஜயசிங்க.
இச் செய்தியறிந்து 30/09/2018 அன்று குறித்த இடத்துக்குச்சென்ற ஹொரவபொதான பொலீஸ் நிலைய பொருப்பதிகாரி ரொஷான் சன்ஜீவ இவர்களின் இன்நிலை கண்டு கண்ணீர் விட்டு அழுததாகவும் தொடர்ந்தும் இவ்வாறான சிரம நிலையில் வாழ இவர்களை தான் ஒரு போதும் அணுமதிக்கபோவதில்லையெனவும்கூறி விஜேசிங்கவையும் அவரின் ஊணமுற்ற மகளையும் மரத்திலிருந்து மீட்டிருக்கிறார்.
-( நவீன உலக மனித மிருகங்களுடன் வாழ்வதை காட்டிலும் மரத்தின் மேல் வாழ்வது எவ்வளவோ மேல்)
இவ்வாறானோரை இனம் கண்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றிவைப்பது குறித்த பிரதேச தலைவர்களின் கடமையல்லவா.
- ஆரிப் S நளீம் -




0 Comments