(08-10-218) கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலை சாதனை மாணவ மாணவிகளையும் அவர்களுடைய பெற்றோர்களையும் பாராட்டி கெளரவிக்கும் முகமாக கல்பிட்டி நகர மத்தியிலிருந்து அல்-அக்ஸா தேசிய பாடசாலை வரை நடை பவணியாக அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இதில் தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் நீளம் பாய்தல் போட்டியில் ஐந்தாவது இடத்தை பெற்று வடமேல் மாகாணத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த S.M.ரிகாஸ் என்ற மாணவரும் 14 வது தேசிய முன்னோடி சுற்றாடல் பாசறை அதேபோல சர்வதேச ஓசோன் பொது அறிவுப் போட்டி மேற்படி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பராட்டுக்களும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
-Rizvi Hussain-
0 Comments