அமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் ஒன்றாக உயர்வு.
கடந்த 2017 ஆம் ஆண்டு எதிர்வரும் 2021 ஆம் ஆண்டிற்குள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் (Powerful Passports) உடைய நாடுகளின் பட்டியலின் கீழ்வர அமீரகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. அச்சமயத்தில் அமீரக பாஸ்போர்டின் மூலம் 132 நாடுகளுக்குள் மட்டுமே விசா இன்றி செல்ல முடியும் என்றிருந்தது தற்போது 155 நாடுகளாக உயர்ந்து 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக ரஷ்யாவுடன் அமீரகம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை அடுத்து அமீரகத்தினர் விசா இன்றி ரஷ்யாவிற்குள் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ரஷ்யாவின் பாஸ்போர்ட் 115வது இடத்தில் தான் உள்ளது.
உலகின் முதலாவது சக்திவாய்ந்த பாஸ்போர்ட் உள்ள நாடாக சிங்கப்பூர் திகழ்கிறது, இதன்மூலம் 166 உலக நாடுகளுக்குள் விசா இன்றி உள்நுழையலாம்.
164 நாடுகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் அமெரிக்கா, தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 10 நாடுகள் உள்ளன. அமீரகம் சைப்ரஸ் நாட்டுடன் இணைந்து 10 இடத்தில் உள்ளதாக ஆர்டன் பாஸ்போர்ட் இன்டக்ஸ் எனும் இணையதளம் தெரிவிக்கின்றது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்


0 Comments