Subscribe Us

header ads

கல்பிட்டி அல்-அக்ஸா அஹதியா பாடசாலை இப்தார் நிகழ்வு.


(03-06-2018) 16 வருட வரலாற்றை கொண்ட கல்பிட்டி அல் அக்ஸா அஹதியா பாடசாலை மாணவர்களின் மேடை நிகழ்ச்சிகளும்,இப்தார் நிகழ்வும் அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்பிட்டி நகரிலுள்ள அரசியல் வாதிகள்,நலன் விரும்பிகள், ஜூம்ஆ பள்ளி தலைவர்கள்,ஊடகவியலாளர்கள்,போன்றோர் விசேட எதிரிகளாக அழைக்கப்பட்ட போதிலும்,கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் A.J.M.தாரிக்,முன்னால் கல்பிட்டி பிரதேச சபை எதிர் கட்சி தலைவர் A.K.அலாவுதீன்,கல்பிட்டி பலநோக்கு கூட்டுறவு சங்க தலைவர் P.M.M.பாஹிம்,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் நிஸாம், முன்னால் கல்பிட்டி பிரதேச சபை வட்டார வேட்பாளர்கள்,நலன் விரும்பிகள் போன்றோர் கலந்து சிறப்பித்தனர்,

இந்நிகழ்வை கல்பிட்டி அல்-அக்ஸா அஹதியா அதிபர் A.J.பெளசிக்(நூரி) அவர்களும் ஆசிரியர்களும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்,இங்கு நடைபெற்ற இப்தார் நிகழ்வுக்கு கல்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஹன்பியாஸ்,Dr:ரைஸ் அவர்கள்,நுரைச்சோலையை சேர்ந்த சகூர் ஹாஜியார் ஆகியோர் உதவி வழங்கி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


கல்பிட்டி ஊடகவிகலாளர் என்ற கெளரவம் கொடுத்து எனக்கும் இந்நிகழ்வுக்கு அழைப்பு விடுத்த அல் அக்ஸா அஹதியா அதிபர் ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

-Rizvi Hussain-














Post a Comment

0 Comments