கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்று முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி வரையில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
நேர அட்டவணையை நன்றாக கவனித்து பரீட்சைக்குத் தோற்றுமாறு பரீட்சைகள் திணைக்களம் மாணவர்களிடம் கோரியுள்ளது.
ஏதேனும் பிரச்சினைகள் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கப்பட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
1911 அல்லது 0112784208/ 0112784537/ 0113188350/ 0113140314 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
உயர்தரப் பரீட்சைக்கு இடைநடுவில் இம்முறை நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதனால் இம்முறை பரீட்சைகளை இரண்டு கட்டங்களாக நடத்த பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்தது.
அதன் அடிப்படையில் இரண்டாம் கட்டப் பரீட்சை இன்று முதல் நடைபெறவுள்ளது.


0 Comments