நேற்றய தினம் கண்டி மாவட்ட திகன பகுதியில் இனவாதிகலள் ஏற்படுத்திய கலவரத்தில் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு பல கோடி பொருமதியான சொத்துக்கள் சேதம் ஆகியுள்ளது.
மேலும் முஸ்லிம்கள் உயிரிலும் மேலாக மதிக்கக்கூடிய பள்ளிவாசல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
அதிலும் கவலைக்குறிய செய்தி குறித்த பிரச்சினையில் தீ வைத்து தாக்கியதில் எமது முஸ்லிம் சகோதரர் அப்துல் பாஸித் (22 வயது மதிக்கத்தக்க ஒருவர்) தீயில் கருகி உயிர் இழந்துள்ளார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்
இது போன்ற இனவாத செயற்பாடுகள் நாட்டில் அதிகரித்து வருவதால் இதற்கு நாம் ஜனநாயக வழியிலும் சட்ட ரீதியாகவும் தீர்வு காண வேண்டும்.
அது குறித்து ஜனநாயக வழியில் போராடி பேசி முடிவு செய்வதற்கு அனைத்து முஸ்லிம் சமுதாயத்தவர்களையும் ஸ்ரீ லங்கா தவ்ஹித் ஜமாஅத் தலைமையகத்திற்கு முன்னதாக அணிதிரளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
எந்த முஸ்லிம் அரசியல் தலைவர்களையும் நம்பி பலன் இல்லை. முஸ்லிம் அமைப்புகளின் ஆன்மீக தலைவர்கள் மற்றும் சமூக தலைவர்களை அழைத்துப் பேசி எந்த பலனும் இல்லை. எனவே தான் குறித்த பிரச்சினையில் ஜனநாயக வழியில் முடிவு காண நினைக்கும் அனைத்து நல் உள்ளம் படைத்தவர்களும் கொள்கை பிரச்சினைய பார்க்காமல் சமூகப் பிரச்சினையை மாத்திரம் கருத்திற் கொண்டு இன்று லுஹர் தொழுகைக்கு முன்னர் தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்திற்கு முன்னால் வந்து கலந்து கொள்ளுமாறு அன்பாய் வேண்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
எம்.எச்.எம் ரஸான்
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
0 Comments