நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதார நிலை குறித்து நாமல் ராஜபக்ஸ சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உயிரையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை என நாமல் குறிப்பிட்டுள்ளார்.
தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்திலேயே இதை குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,
நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்படும் வன்முறை சம்பவங்களையடுத்து சட்டங்களை
அமுலாக்குவதற்கு சட்டம் ஒருங்கு அமைச்சின் உத்தரவு வரும் வரை காத்திருக்க
வேண்டி இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் திகன மற்றும் அம்பாறையில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த நிலைக்கு கடந்த அரசாங்கத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
நாடு முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதில் அரசு கவனம் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடடுள்ளார்.
இதேவேளை,
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நடந்துவரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக,
நாளை நுகேகொடையில் கூட்டு எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட இருந்த
போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் பதிவிட்டுள்ளார்.
0 Comments