Subscribe Us

header ads

கல்பிட்டி வைத்திய சாலையில் நடைபெற்ற இரத்த தான முகாம்


(28.02.2018) கல்பிட்டி வைத்திய சாலையில் நடைபெற்ற  இரத்த தான முகாமில் ஆண்கள்,பெண்கள், ஆயுதப்படையினர் ,போன்றோர் இன மத பேதமின்றி இரத்த தான முகாமில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வு இன்று பி.ப.1.30 மணிவரை நடைபெற்றது

மிகமுக்கியமான உயிர் காக்கும் சமூக சேவையான இந்த இரத்த தான முகாமை பனிரெண்டு வருடங்களாக கல்பிட்டி வைத்திய சாலையின் ஒத்துழைப்புடன் தனியாளாக தனது மகன்,மனைவி ஆகியோரின் நினைவாக மிகச்சிறப்பாக நடாத்தி வரும் A.M.C.ரொட்ரிகோ எனும் மகதுன் ஐயா உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்.


இந்நிகழ்வில் கற்பிட்டியின் மூத்த இஸ்லாமிய மத போதகர் சகோ இபாதுல்லாஹ் அவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Rizvi Hussain















Post a Comment

0 Comments