15 வருடங்களின் முன் இஸ்லாத்தை தழுவிய குடும்பம் ஒன்று வசிப்பிடமின்றி தவிக்கின்றது. இவர்களுக்கு 4 பிள்ளைகள். மூத்தது 18 வயதுடைய பெண். 14, 12 மற்றும் 9 வயதில் 3 ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.
புத்தளம், மன்னார் வீதி, 4ம் மைலில் அமைந்துள்ள வேப்பமடு - மொஹிதீன் நகரில் அவர்களுக்கு சொந்தமான காணி உண்டு. தற்காலிகமாக அவர்கள் வாழும் வீட்டின் படங்கள் இப்பதிவோடு இணைக்கப்பட்டுள்ளன.
ஒரு வயதான பெண் பிள்ளை வசிக்க கூடிய இடமாக இது இல்லாத காரணத்தால், வேப்பமடு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கமானது அவர்கள் மானமுடன் கண்ணியமாக வாழ ஒரு சிறிய குடிலையாவது அமைத்து கொடுக்க முன்வந்துள்ளது. இதில் எம் மக்கள் அனைவரதும் பங்களிப்பு பெரும் உதவியாக அமையும். சிறு துளி பெரும் வெள்ளம் என்பது நாமறியாத ஒன்றல்ல.
மேலும், உங்கள் இந்த உதவியானது வல்லோனிடத்தில் பெரும் அருளையும் மறுமை நாளில் உங்களுக்கு சேமிப்பாகவும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
உதவி செய்ய விரும்பியவர்கள் தயவு செய்து பின்வருவோரைத் தொடர்பு கொள்ளுங்கள் - 1.தலைவர் ஹுசைன் 0757924777 2.செயலாளர் ரிஸ்வாத் - 0752240044 ( Munawfar M Riswath )
தயவு செய்து, இந்த பதிவை பகிர்ந்து முடியுமானவர்கள் இவர்களுக்கு உதவ முன்வாருங்கள். அல்லாஹ் மென்மேலும் உங்களுக்கு பரக்கத் செய்வானாக.

0 Comments