இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று கொழும்பில் இடம்பெற்ற 20க்கு 20 கிரிக்கட் போட்டியில் பங்களாதேஸ் அணி வெற்றி பெற்றதன் பின்னர் அந்த அணியினரின் ஓய்வு அறை சேதப்படுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது இறுதி நேரத்தில் இரண்டு அணி வீரர்கள் மத்தியில் முரண்பாட்டு நிலை ஏற்பட்டது.
பங்களாதேஸ் அணி வீரர் ஒருவர் ரண் -அவுட் ஆகியிருந்தார். இதனாலேயே இரு அணிகளுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன்போது ஒரு கட்டத்தில் பங்களாதேஸ் அணி வீரர்கள், ஆடுகளத்தில் இருந்து வெளியேறினர். பின்னர் ஆடுகளத்துக்கு திரும்பிய நிலையில் பங்களாதேஸ் அணி போட்டியில் வெற்றி பெற்றது.
எனினும் இந்த வெற்றியின் பின்னர் இலங்கையின் ரசிகர்களுக்கும் பங்களாதேஸ் வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இதனையடுத்தே அவர்களின் ஓய்வு அறை சேதப்படுத்தப்பட்டுள்ளது. கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ள பங்களாதேஸ் அணியினர்!
பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் உடை மாற்றும் அறையில் நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது. இலங்கைக்கு எதிரான இன்றைய இருபதுக்கு - 20 போட்டியில் பங்களாதேஷ் அணி 2 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.
இதையடுத்து கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தின் பங்களாதேஸ் வீரர்கள் உடை மாற்றும் அறையில் இடம்பெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் அவ்வறையின் கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இச் செயற்பாடானது கிரிக்கெட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளது.
0 Comments