Subscribe Us

header ads

விசா இன்றி 42 நாடுகளுக்கு பயணிக்க வாய்ப்பு! இலங்கையர்களுக்கு கிடைத்த அதிஷ்ட வாய்ப்பு!


உலகின் பலமான கடவுச்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலை சர்வதேச குடியுரிமை தொடர்பில் செயற்படுகின்ற ‘Henley & Partners' நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒரு நாட்டின் கடவுச்சீட்டினை பயன்படுத்தி எத்தனை நாடுகளுக்கு செல்ல முடியும் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது.

105 நாடுகளை உள்ளடக்கியுள்ள இந்த பட்டியலில் இலங்கைக்கு 94 வது இடம் கிடைத்துள்ளது.

அதற்கமைய இலங்கையின் வெளிநாட்டு கடவுச்சீட்டினை பயன்படுத்தி 42 நாடுகளுக்கு பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இலங்கை மற்றும் மியன்மார் நாடுகள் 94வது இடத்தினை பகிர்ந்து கொண்டுள்ளன.

சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் பலமற்ற கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.

ஜப்பான், சிங்கப்பூர், ஜேர்மன், தென் கொரியா, ஸ்பெய்ன், பின்லாந்து, பிரான்ஸ், இத்தாலி மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் பலமிக்க கடவுசீட்டுகளை கொண்ட நாடுகளாக பதிவாகியுள்ளது.

இந்த பட்டியலுக்கு அமைய ஸிம்பாப்வே 61 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்.

இலங்கை பல்வேறு விடயங்களில் முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் ஸிம்பாப்வே நாட்டை விட பின்தங்கியுள்ள நிலைமை குறித்து ஆராய்ந்த பார்க்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments