Subscribe Us

header ads

அனைத்து தரப்பினர்களும் புத்திசாலிதனமாக செயற்பட வேண்டும் - மஹிந்த ராஜபக்ச

சமாதானத்தை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்வது அனைவரினதும் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து  வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பில் அனைத்து தரப்பினர்களும் புத்திசாலிதனமாக செயற்பட வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினர்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும், அமைதியாக செயற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த அனர்த்தம் தீவிரமடைந்ததை தொடர்பிலும், பொலிஸாரின் செயற்பாடு தொடர்பிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments