Subscribe Us

header ads

கண்டி கலவரம் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை

கண்டி - திகன, தெல்தெனிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்றதும், சுயாதீனமானதுமான விசாரணையை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தின் சகல மக்களினதும் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், ஏற்படக்கூடிய நிலைமைகளை தவித்துக்கொள்வதற்காக சகல தரப்பினருடனும் இணைந்து பொறுப்புடன் செயலாற்றுமாறு பாதுகாப்பு தரப்பினரை மேலும் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments