Subscribe Us

header ads

இணையத்தை கலக்கிய மாணிக்க மலரே “பிரியாவுக்கு எதிராக” இஸ்லாமியர்கள் பொலிஸில் புகார்!

உலகம் பூராவும் இணைய பார்வையாளர்களை களங்கடித்த மலையாள பெண்ணின் கண்ணசைவு காட்சியால் விபரீதம்!

இஸ்லாத்தை புண்படுத்தும் விதத்தில் பாடல் வரிகள் புனையப்பட்டுள்ளதாக ஹைதராபாத் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது!

குறித்த மலையாள பாடலின் தமிழ் பெயர்ப்பு இதுதான்...

'முத்து மலர் போன்ற பெண்ணான கதீஜா மக்கா எனும் புனித நகரில் ராணி போல் வாழ்ந்தாள்...


இறுதி நபியிடம் அவள் கேட்டாள் அவளது வியாபாரத்தை நடாத்திச் செல்ல... அவரைப் பார்த்ததுமே அவர் மேல் அன்பு கொண்டாள் அவள்...


வியாபாரம் முடித்து வந்த அருள்செறிந்த ரஸுலை மணமுடிக்கும் வரம் பெற்றாள் கதீஜா...'


நபிகளாருக்கும் கதீஜா அம்மையாருக்கும் இடையிலான வரலாற்றை சுருக்கமாகச் சொல்லும் இந்தப் பாடலுக்கும், இப்போது வெளிவந்திருக்கும் பாடல் காட்சிகளுக்கும் இடையில் என்ன சம்பந்தம்?

மலையாள இயக்குனர் ஒமர் லூலு இயக்கி வெளிவரவுள்ள 'ஒரு அடார் லவ்' என்ற திரைப்படத்தில் வரும் இந்தப் பாடல், கேரளாவின் ஒரு மாப்பிள்ளை பாடலாகும். அதாவது, கேரள முஸ்லிம்கள் மத்தியில் உள்ள நாட்டார் பாடலாகும். இந்தப் பாடலை ரீமேக் செய்து, ஒரு அடார் லவ்வில் இணைத்திருக்கிறார்கள்.

Post a Comment

0 Comments