3 வருடங்களின் முன் அன்னப்பறவையில் ஒன்று சேர்ந்தவர்களின் இலக்கு வெறுமணே இந்த நாட்டில் இருந்தஜனாதிபதி Mahinda Rajapaksa அவர்களை தோற்கடிப்பது என்ற குறுகிய நோக்கமே தவிர இந்த நாட்டை சிறப்பாகநிர்வகிக்க வேண்டும் என்ற நீண்ட கால இலக்கு கிடையாது என்றே கூற வேண்டும்.
தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களோடு ஒன்று சேர்ந்த இந்த கட்சிகள் மஹிந்த அவர்களை தோற்கடித்த பின்பு, இந்த நாட்டைதிறன்பட நடத்திச்செல்லவும் இல்லை, கள்வர்களை கைதுசெய்யவுமில்லை, நாட்டின் பொருளாதாரத்தைமுன்னேற்றவும் இல்லை, குறைந்தது நாட்டின் கடனையாவது குறைக்கவும் இல்லை.
கொள்ளையடித்தான் கொள்ளையடித்தான் என்று கூறி அவர்களும் கொள்ளையடித்தார்கள், போக மாட்டோம் போகமாட்டோம் என்று சீனாவிடம் மீண்டும் பிச்சைக் கேட்டு போனார்கள், கூட்ட மாட்டோம் கூட்ட மாட்டோம் என்றுபாராளுமன்ற உறுப்பினர்கள் முதல் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை வரை எண்ணிக்கையை கூட்டினார்கள்,செய்வோம் செய்வோம் என்று சொல்லி எந்த அபிவிருத்தியையும் செய்யாமல் மந்தாமாக அரசை நகர்த்திச்செல்கிறார்கள்.
இந்த 3 வருடத்தில் ஒரு எதையும் செய்யாத இந்த நல்லாட்சி என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ஸ்திரமற்ற ஆட்சிஇன்னும் ஒரு சில மாதங்களில் கலைகப்பட்டு மீண்டும் மொட்டட்சியோ? அல்லது கூட்டாட்சியோ? ஒரு அழகாகநீண்டகால இலக்குகளோடு அழகாக திட்டமிடப்பட்டு தேர்தல் காலத்தில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்குகொடுக்காமல் பயணிக்கும் என நம்புவோம்.
ஒரு போதும் குறுகிய இலக்குகளுக்காக உருவாக்கப்பட்ட கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ மக்களால் ஒருபோதும் எற்றுக்கொள்ளப்படப்போவதில்லை.
இஷாம் மரிக்கார் புத்தளம்
0 Comments