Subscribe Us

header ads

முக்கியமான அரசியல் கட்சியொன்று கடந்த தேர்தலில் வாக்காளர்களை கவர புதிய யுக்தியொன்றைக் கையாண்டதை கவனித்தீர்களா?

முக்கியமான அரசியல் கட்சியொன்று கடந்த தேர்தலில் வாக்காளர்களை கவர புதிய யுக்தியொன்றைக் கையாண்டதாம். வாக்காளர்களின் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த அந்தக் கட்சி உதவியதாம்.

மின்சாரக் கட்டணப் பட்டியலைச் செலுத்த உதவியது ஒருவகையில் கையூட்டல் என்றாலும் அதுபற்றி யாரும் பிரஸ்தாபிக்கவில்லையாம். ஏனெனில், அதனை சர்ச்சையாக்கினால் மக்கள் அதிருப்தியாகி பிரச்சினையைக் கிளப்பிய கட்சி மீது கோபத்தைக் காட்டிவிடுவார்கள் என்ற பயமே அதற்குக் காரணமாம்.

அதே கட்சி ஓட்டோ ஓட்டுநர்களுக்கு இலவசமாக டயர்களை வழங்கியதாம். அதையும் எவரும் கண்டுகொள்ளவில்லையாம். கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறியமுடியாத நிலைமைதான் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக அரசியல்வாதியொருவர் நகைச்சுவையாகக் கூறினார்.-JM-

Post a Comment

0 Comments