நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வரும் பிரதேசத்தின் தமிழ்மொழி மூல மானவ்ரகளின் கல்வியறிவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நோக்கில் தங்கள்பிள்ளைகளை எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பில் விளக்கமளிக்கும் மாபெரும் சிறுவர் உளவியல் கருத்தரங்கொன்று அவிசாவளை நகரில் 2018 ஜனவரிமாதம் 08 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.30 மணி தொடக்கம் 5.00 மணி வரை அவிசாவளை - சீதாவக்கபுர நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக பிரபல ஆலோசகராக திரு. இல்ஹாம் மரிக்கார் அவர்கள் கலந்து கொள்ளஉள்ளார்கள். அன்றைய தினம் பிள்ளைகள்குறைந்த புள்ளிகள் எடுத்தல், கவனக் குறைவாக நடந்து கொள்ளல், தேவையில்லாமல் குழப்படி செய்தல் போன்ற பிள்ளை வளர்ப்பில் பெற்றோர் எதிர்நோக்கும்பிரச்சினைகளுக்கான காரணங்களும், அவற்றிற்கான நிரந்தரத் தீர்வுகளும் தொடரபில் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. மேலும் பெற்றோர், பிள்ளை வளர்ப்பில்எதிர்நோக்கும் தனிப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் உளவள ஆலோசகரிடம் கூறி, அவற்றிற்கான இலவச ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்.அத்துடன் இந்நிகழ்வின் இறுதியில் " தமிழ் கல்வி முன்னேற்றக் கழகம்" ஒன்றினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளும்மேட்கொள்ளப்படவுள்ளன. ஆகவே, பெற்றோர், பிரதேசத்தின் கல்விமான்கள், ஆசிரியர்கள், இளைஜர்கள் மற்றும் தமிழ்மொழி மூல மாணவர்களின்கல்வியினை வளர்ச்சிப் பாடையில் கொண்டு செல்ல வேண்டும் எனும் சேவை மனப்பான்மையுடைய அனைவரும் இவ்வரிய நிகழ்வில் கலந்து கொண்டுபயன்பெறுவதோடு, பிரதேசத்தின் தமிழ் மொழி மூல மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கைக்கொடுத்து உதவுமாறு தல்துவை - ரோயல் அகாடமி கல்விநிலையம் கேட்டுக் கொள்கின்றது.
0 Comments