சவுதி அரேபியாவில் புனித நகரான மதினாவில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) திருமணமானது. இருவரும் தங்களுடைய முதலாவது திருமண இரவை 420 கி.மீ தூரத்திலுள்ள மற்றொரு புனித நகரான மக்காவின் அஸீஸியா பகுதியில் உள்ள ஒரு 2 அடுக்குமாடி வீட்டில் புதிய வாழ்வை துவங்கினர்.
அடுத்த நாள் (சனிக்கிழமை) காலையில் அந்த வீட்டின் தரைத்தளத்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்தார். அவரது புது மனைவி புகையால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தம்பதியின் திருமண வாழ்வு சுமார் 10 மணிநேரத்தில் முடிவுக்கு வந்ததை அறிந்த சவுதிவாழ் பொதுமக்கள் அவர்களுக்காக தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் பிரார்த்தனையும் செய்து வருகின்றனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Source: Gulf News
தமிழில் : நம்ம ஊரான்
0 Comments