பாறுக் ஷிஹான்
யாழில் கட்டின பிங்கும பெரஹரா நேற்று(3) ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதன் போது யாழ் பண்ணைப்பகுதியில் இருந்து ஆரம்பமான இப்பெரஹரா ஆரியக்குளத்தில் உள்ள நாகவிகாரை முன்றலை சென்றடைந்தது.
யாழ். நாக விகாரை நாயக்க தேரர் தலைமையில் நடைபெறும் இந்த பெரஹராவை தமிழ், பௌத்த சங்கம் மற்றும் நந்தாராம தமிழ், பௌத்த அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் யாழ். மாவட்ட பாதுகாப்பு படையினர் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
பெரஹராவில் பிள்ளையார், சிவன், முருகன், விஷ்ணு மற்றும் முத்தேவியர்கள் ஒன்றிணைந்த ஒரு சொரூபம் ஆகியன ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சிறப்பம்சமாகும்.
'கட்டின பிங்கும' என்பது யாழ். நாக விகாரை கட்டப்பட்ட தினத்தின் நினைவாக நடைபெறும் நிகழ்வாகும்.
0 Comments