இணையத்தில் வருகின்ற விடயங்கள் அனைத்தும் உண்மை என நம்பிக் கொண்டு தங்களின் அறியாமையின் காரணமாக அதனை ஏனையோருக்கும் பகிர்ந்து தவறு செய்யும் நண்பர்களே !
இன்று காலை பத்து மணியளவில் உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகின்றன என்று நகைச்சுவையாக ஒரு பதிவினை நேற்று இரவு பதிவேற்றம் செய்தேன் . தற்போதைய காலங்களில் சாதாரண தர பரீட்சை நடைபெறும் போது உயர்தர பரீட்சை முடிவுகள் வெளிவராது என்கின்ற சாதாரண விடையம் கூட அறியாத பலர் அந்த பதிவு உண்மை என நம்பிக் கொண்டு அவர்களும் பதிவு செய்ய ஆரம்பித்தனர் . ஏகப்பட்ட மீம்ஸ் கிரியேட்டர்கள் கூட இந்த விடயத்தை பற்றி என்னிடம் ஏதும் கேற்காமல் மீம்ஸ் களை பதிவிறக்கினார்கள் .
இன்று காலை விடிந்தவுடன் முகப்புத்தகத்தில் இதுதான் Hot news இன்று காலை பத்து மணிக்கு முடிவுகள் வெளியாகின்றன . பல பதிவுகளில் என்னை mention செய்து பலபேர் வினாவினார்கள் . எனக்கு call செய்து கேட்டவர்கள் பலபேர் .
ஒரு நகைச்சுவைக்காக போடப்பட்ட பதிவு பலபேரால் பலவாறு பகிரப்பட்டு இறுதியில் உண்மையாகவே இன்று முடிவுகள் வெளியாகின்றது என்று போலியாக பேசப்பட்டு விட்டது .
நீங்கள் பகிரும் விடயங்களை பற்றி முதலில் நீங்கள் ஆராய கற்றுக்கொள்ளுங்கள் . அந்த விடயம் உண்மையானதா அல்ல பொய்யானதா என்று நீங்கள் அறிந்த பின்னரே அதனை அடுத்தவர்களுக்கு பகிருங்கள் .
இணையத்தில் வருகின்ற விடயங்கள் முக்கியமாக whats app இல் வருகின்ற விடயங்கள் உதாரணமாக :- ஒரு குடும்பத்தின் புகைப்படத்தை இட்டு அதற்கு voice கொடுத்து கூறியிருப்பார்கள் எங்களில் ஒருவருக்கு கால் , கைகள் இல்லை அல்லது ஏதேதோ பல காரணங்கள் அந்த voice record இல் கூறியிருப்பார்கள் . உங்களில் உதவி செய்யும் மனப்பாங்கை உடையவர்கள் இந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்து உங்களால் முடிந்த உதவிகளை வழங்குங்கள் என்று . நீங்களும் பெரும் மனதை உடைய பலபேர் அந்த விடயம் உண்மை என நம்பி எல்லோருக்கும் பகிர்வீர்கள் . அப்பிடி அடுத்தவர்களுக்கு அதனை forword செய்ய முன்பு அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு விடுத்து அந்த விடயம் உண்மையானதா என்று அறிந்து கொள்ளுங்கள் அதன் பின் அதனை forword செய்யுங்கள் . சில சமயங்களில் இரண்டு மூன்று வருடங்கள் பழைய விடயங்களை இப்போது வரை whats app இல் உலாவந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு முழு காரணம் எல்லா விடயங்களும் உண்மை என நம்பி ஏனையோருக்கு பகிரும் உங்கள் அறியாமை மாத்திரமே !
இந்த புகைப்படத்திற்கு முதலில் லைக் இடுங்கள் அப்பிறம் see என்று கமண்ட் பன்னுங்கள் பிறகு இதனை share செய்துவிட்டு பாருங்கள் ஆச்சரியம் இந்த புகைப்படத்தில் மறைந்துள்ள அழகான பெண் உங்கள் கண்களிற்கு காட்சியளிப்பாள் என்று போடப்பட்டு இருக்கும் பதிவுகளை முதலில் share செய்வதை தயவாக நிருத்திக்கொள்ளுங்கள் உங்கள் அறியாமையின் தன்மை தன்னால் குறைவடையும் .
உண்மையான விடயம் என்று அறிந்த பின் மாத்திரமே அதனை அடுத்தவர்களுக்கு பகிருங்கள் 

0 Comments