Subscribe Us

header ads

"bomb on board" பாஸ்வேர்ட்டால் கதிகலங்கி போன விமான பயணிகள்



துருக்கி ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைநகர் இஸ்தான்புல்லில் இருந்து கென்யாவின் நைரோபிக்கு சுமார் 100 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த போது திடீரென சூடானில் தரையிறக்கப்பட்டது. காரணம் ஒரு ப்ளூடூத் வைபை ஹாட்ஸ்பாட் பாஸ்வேர்டு.

பயணி ஒருவர் தனது வைபை பாஸ்வேர்டாக "bomb on board" என்ற வார்த்தைகளை ரகசிய பெயரை வைத்திருந்தார். இந்த பாஸ்வேர்டை படித்த விமானத்தின் தானியங்கி கணினி அமைப்பு விமானிகளை எச்சரித்ததன் விளைவே உடனடி விமான தரையிறக்கம்.

பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு சோதிக்கப்பட்டு மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். இந்த சோதனையின் போது தான் அந்தப் பயணியின் மிரட்டும் ப்ளூடூத் வைபை பாஸ்வேர்டு கண்டுபிடிக்கப்பட்டது.

எனினும், அந்தப் பயணி எந்தவித தவறான நோக்கமும் இன்றி எதார்த்தமாக அந்த வில்லங்க பாஸ்வேர்டை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரை மன்னித்து, பாஸ்வேர்டை மாற்றுமாறு புத்திமதி சொல்லி அனுப்பிவிட்டனர்.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான் 

Post a Comment

0 Comments