பாறுக் ஷிஹான்
வடமராட்சி, நெல்லியடிப் பகுதியில் பொலிஸர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இன்று(29) இணைந்து நடத்திய வீதிச் சோதனையில் கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
"கஞ்சாவை கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் அல்வாயைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சத்தேகநபரின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிடப்பட்டது. அவரது உடமையிலிருந்து 4 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டது. மோட்டார் சைக்கிளும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது" என்று பொலிஸார் மேலும் கூறினர்.
0 Comments