ஹம்பாந்தோட்டை துறைமுகத்தால் இலாபமீட்ட முடியாதென்றால் அதனை எதற்கு சீனாஎடுக்கின்றதென சிந்தித்துகொள்ளுமாறு ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர்நாமல் ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
உடுகம்பொலயில் இடம்பெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்..
இலங்கை நாட்டை வளமிக்கதாக மாற்றும் சிந்தனையில் எங்களால் ஹம்பாந்தோட்டைதுறைமுகம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த துறைமுகத்தை அடிப்படையாக கொண்டு பலசெயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தோம். ஓரளவு செய்துமுள்ளோம்.
இப்போது அத் துறைமுகத்தை இலங்கை அரசு சீனாவுக்கு வழங்கியுள்ளது. சில காலம்முன்பு அப்படி வழங்கமாட்டோம் என்று தான் கூறினார்கள். அப்படி கூறிவிட்டுவழங்குவதே அவர்கள் பிழை செய்துள்ளமையை அறிந்துகொள்ளச் செய்கிறது. இலங்கைஒரு சிறிய நாடு. இப்படி முக்கிய வளங்களை விற்பனை செய்தல் பாரதூரமானவிளைவுகளை ஏற்படுத்தும். இதன் மூலம் சீனா அரசு இலங்கை நாட்டை தங்களதுபிடிக்குள் வைத்திருக்கவும் வழி சமைத்து கொடுக்கும்.
ஏதும் கேட்டால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் பெறப்பட்ட கடனைசெலுத்தவே என கூறுகிறார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இலங்கை வந்து கடன்பெறுமானம் குறைந்தள்ளதா அதிகரித்துள்ளதா? இவர்கள் இதனை கடனைஅடைக்கவெல்லாம் செய்யவில்லை. இந்த ஆட்சி வெளிநாட்டு சக்திகளால்ஏற்படுத்தப்பட்டவை. அவர்களின் தேவையை நிறைவு செய்து கொடுக்கின்றனர்.
இந்த துறைமுகத்தால் எந்த பயனுமில்லையென சிலர் சொல்லுகிறார்கள். அப்படியானால்அது இன்று மூடப்படவில்லையே! அதனை வைத்து சீனாவால் பயன்பெறமுடியுமென்றால், ஏன் எம்மால் முடியாது? இப்படி சிறுபிள்ளைத்தனமான காரணங்களைமுன்வைப்பவர்கள் தங்களது இயலாமைகளை தாங்களாகவே ஏற்றுக் கொள்கின்றனர் எனகுறிப்பிட்டார் ..
0 Comments