மேயர் பதவிக்காக முஸ்லிம்களை அடகும் ஆசாத் சாலி முன்னெடுத்துள்ளதாகபானதுறை பிரதேச சபை முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் குறிப்பிட்டுள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,
கொழும்பு மாநகர சபைக்கு சு.க சார்பாக அஸாத்சாலி மேயர் வேட்பாளராக களமிறங்குவதுஉறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அவர் அரசுக்கு அதி உச்ச ஆதரவுப்போக்கை கடைப்பிடித்திருந்தார்.கிந்தோட் டை சம்பவத்தின் போதான தவறுகளை கூடஅவர் முஸ்லிம்கள் மீது போட்டு, முஸ்லிம்களை பெரும் இக்கட்டில் தள்ளியிருந்தார்.இதன் பின்னணியில் ஏதாவது இருக்கும் என பலராலும் பேசப்பட்டது. இப்போது பார்த்தால்மேயராக முன்மொழியப்பட்டுள்ளார்.
ஒருவர் ஒரு கட்சிக்கு விசுவாசமாக இருக்கும் போது தான், அக் கட்சி அவருக்கு மேயர்பதவியை வழங்க முன்வரும். இதன் மூலம் சு.க இவருக்கு கால் கட்டு போட்டுள்ளது.இவரால் எப்படி முஸ்லிம் சமூகத்துக்கு ஆதரவாக போராட முடியும்? இருந்தாலும்ஏதாவது மைக் கிடைத்தால் இவரை அடிக்க தியாகி வேறு யாரும் இருக்க முடியாது. இவர்முஸ்லிம் சமூகத்தை அடமானம் வைத்தது இந்த பதவிக்காகவே.
இம்முறை கொழும்பு மாநகர சபையை கூட்டு எதிர்க்கட்சியினர் கைப்பற்றுவர் என்பதில்எந்த சந்தேகமுமில்லை. கொழும்பு மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸபேணிய கொழும்பின் அழகை இவ்வாட்சியாளர்கள் பாதுகாக்காது சிதைத்தது போன்றவெறியில் உள்ளனர். இவ்வருடம் கூட்டு எதிர்க்கட்சியினர் கொழும்பில் நடாத்திய மே தினகூட்டத்துக்கு திரண்டிருந்த மக்கள் எண்ணிக்கை இதற்குக் பெரும் சான்றாகும். அதுமாத்திரமன்றி கூட்டு எதிர்க்கட்சி சார்பாக மேயர் வேட்பாளராக பிரபலமான முஸ்லிம்ஒருவரே தேர்தல் கேட்கவுமுள்ளார்.
அவ்வாறில்லாது போனாலும் கொழும்பு மாநகர சபையை ஒரு போதும் சு.க கைப்பற்றக்கூடிய நிலை இல்லை. இது எல்லோரும் அறிந்த உண்மை. அசாத்சாலி முஸ்லிம்களைஅடகு வைத்து பெற்ற இந்த விடயத்தில் கூட அவர் வெற்றி பெற முடியாது என அவர்குறிப்பிட்டுள்ளார்.
0 Comments