சுவிஸ் : புத்தாண்டு நள்ளிரவில் ஐஸ்கிரீம் சாப்பிடுவதும், சாப்பிட்ட ஐஸ்கிரீமை பாதியிலேயே தூக்கிப் போடுவதுதான், சுவிஸ் மக்களின் புத்தாண்டு பாரம்பரியம். புத்தாண்டு சந்தோஷத்தையும், ஏமாற்றத்தையும் கொடுக்க இருக்கிறது என்பதை, இந்த பாரம்பரியம் நினைவூட்டுகிறது.
ஸ்பெயின் : ஸ்பெயின் மக்கள், புத்தாண்டை திராட்சை பழத்துடன் கொண்டாடுகிறார்கள். புத்தாண்டு பிறக்கையில், 12 திராட்சைகளை சாப்பிடுவது ஸ்பெயின் மக்களின் பாரம்பரியம். அப்போதுதான் புத்தாண்டின் 12 மாதங்களும் இனிக்குமாம்.
அயர்லாந்து : ரொட்டிகளை சமைத்து அதை வீட்டு சுவரில் தூக்கி எறிவது, அயர்லாந்து மக்களின் புத்தாண்டு ஸ்டைல். புத்தாண்டு தினத்தில் ரொட்டியை கொண்டு சுவரில் அடிப்பதினால், வீட்டில் இருக்கும் தீய சக்தி விலகுமாம்.
டென்மார்க் : வருடம் முழுக்க உணவு தட்டுகளை சேகரிக்கும் டென்மார்க் மக்கள், அதை புத்தாண்டு தினத்தன்று உடைக்கிறார் கள். எப்படி தெரியுமா?, நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் செல்பவர்கள், அவர்களது வீட்டுக் கதவில் தட்டுகளை தூக்கி எறிந்து உடைக்கிறார்கள். தட்டுகள் உடைவது போலவே, அவர்களது பிரச்சினைகளும் சில்லு சில்லாக உடைந்துவிடுமாம்.
கொலம்பியா : சுற்றுலாப் பயணங்களுக்கு, பிரபலமான சூட்கேஸை புத்தாண்டு தினத்தில் தூக்கிக்கொண்டுச் செல்வது, கொலம்பியா மக்களின் பழக்கம். இதன்மூலம் உலக பயணங்களும், தொழில் வளமும் அதிகரிக்கும் என்பது கொலம்பியா மக்களின் நம்பிக்கை.
இதுமட்டுமா...? இதுபோன்ற ஏராளமான நம்ப முடியாத பழக்க வழக்கங்கள், உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
0 Comments