Subscribe Us

header ads

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்க பெண்டகன் அனுமதி

அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை சேர்க்கும் திட்டத்தை முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா கொண்டு வந்தார். இந்த திட்டத்தை பலரும் ஆதரித்த நிலையில், அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பின் அமெரிக்க ராணுவத்தில் திருநங்கைகளை தேர்வு செய்வது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கூறப்பட்டது.

டிரம்ப் உத்தரவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர். நீதிமன்றங்களிலும் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. வாஷிங்டன் மாகாண நீதிமன்றம் உள்பட மூன்று நீதிமன்றங்கள் டிரம்ப் அறிவிப்புக்கு தடை விதித்தும், திருநங்கைகளை மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 

இதனையடுத்து, வரும் ஜனவரி மாதம் முதல் ராணுவத்தில் திருநங்கைகள் வழக்கம் போல தேர்ந்தடுக்க படுவார்கள் என ராணுவ தலைமையகமான பெண்டகன்  அறிவித்துள்ளது. அமெரிக்க ராணுவ தலமையகமான பெண்டகனின் இந்த அறிவிப்பு, டிரம்ப் அறிவிப்புக்கு மேலும் சட்ட ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 

Post a Comment

0 Comments