Subscribe Us

header ads

சர்வதேச மீன் மற்றும் கடலுணவு கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)


சர்வதேச மீன் மற்றும் கடலுணவு கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த (08) பிற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் கொழும்பு, விகாரமஹாதேவி திறந்த கலையரங்கில் இடம்பெற்றது.
இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் கடலுணவு மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திகளை பிரபல்யப்படுத்தும் நோக்குடன் மீன்பிடி, நீர் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள் இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தன. இக்கண்காட்சி 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் விகாரமஹாதேவி திறந்த கலையரங்கில் நடைபெறும்.
கண்காட்சியை திறந்துவைத்த ஜனாதிபதி, உள்நாட்டு வெளிநாட்டு மீன் மற்றும் கடலுணவு கண்காட்சி கூடங்களை பார்வையிட்டார்.
மீன் மற்றும் கடலுணவு மேம்பாட்டுக்காக நீண்ட காலம் பணியாற்றிய நாரா நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் மங்கலிகா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





Post a Comment

0 Comments