வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் என பல மூடநம்பிக்கைகளுக்கு ஆரம்ப வழிகாட்டியே காலண்டர் தான்.
இஸ்லாம் பகுத்தறிவின் மார்க்கம். மூடநம்பிக்கைகளுக்கு எந்த நிலையில் ஒரு முஸ்லிம் துணைபோக கூடாது. அந்த அடிப்படையில் நமது கடை மற்றும் அலுவலகம் சார்பில் கொடுக்கும் காலண்டரில் இந்த வாஸ்து, ராசிபலன், நல்ல நேரம் கெட்ட நேரம் போன்ற எந்த மூடநம்பிக்கைகளுக்கும் இடம் கொடுக்காமல், அதற்கு பதிலாக இஸ்லாமிய நற்போதனை அடங்கிய வாசகங்களை அதில் அச்சடித்து கொடுத்தால் அதன்மூலம் அவர்கள் இஸ்லாத்தை ஓரளவு விளங்க கூடும்.
இதில் கொடுமை என்னவென்றால் இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டர்கள் பல மஸ்ஜித்களிலேயே தொங்குகிறது.!
தன்னுடைய நேர்மையான வியாபாரத்தின் மூலம் தான் விற்கும் பொருளுடன் சேர்த்து இஸ்லாத்தையும் அன்பளிப்பாக வழங்க வேண்டிய ஒரு முஸ்லிம், இதுபோன்ற மூடநம்பிக்கைகளை அன்பளிப்பாக கொடுப்பது எவ்வகையில் நியாயம்.!
*ஜோதிடம் பற்றி இஸ்லாம்*
நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
ஜோதிடன் அல்லது குறிகாரனிடத்தில் வந்து அவன் கூறுவதை உண்மை என நம்பக் கூடியவன், முஹம்மதின் மீது இறக்கப்பட்ட இறைநூலை (குர்ஆனை) நிராகரித்தவன் ஆவான்."
(நூல்: முஸ்னது அஹ்மது)
மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் ஜோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை."
(நூல்: முஸ்லிம் 4488)
எனவே இந்த மூடநம்பிக்கைகள் அடங்கிய காலண்டரை அன்பளிப்பாக தருவதிலுருந்தும் மேலும் அதனை நமது வீட்டில், கடையில், மஸ்ஜிதுகளில் தொங்க விடுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்வோம்.!
-Hoorulayn Leeza-
0 Comments