லக்கேஜ் குறித்து அபுதாபி விமான நிலையத்தின் பெயரால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை போலி என அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் பெயரில் ஒரு போலி சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. அந்த சுற்றறிக்கையில் கண்டுள்ளபடி, எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் கார்டூன் அட்டைப் பெட்டிகள் மற்றும் மூட்டைகளில் சுற்றி லக்கேஜ் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறும் அச்சுற்றறிக்கை முழுமையான போலி அறிக்கை என அபுதாபி சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.
லக்கேஜ் தொடர்பில் துபை சர்வதேச விமான நிலையம் மட்டுமே கடந்த மார்ச் மாதம் சில புதிய நடைமுறைகளை அறிவித்திருந்ததே அன்றி நாங்களோ அல்லது எந்த விமான நிறுவனமோ எத்தகைய மாற்றங்களை அறிவிக்கவில்லை மாறாக தற்போது நடைமுறையில் உள்ளவை அப்படியே தொடர்வதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments