Subscribe Us

header ads

புனித மக்கா, மதினா மஸ்ஜிதுகளில் இனி போட்டோ எடுக்கத் தடை!



மக்காவிலுள்ள புனித மஸ்ஜிதுல் ஹரம் (கஃபாதுல்லாஹ்) மற்றும் புனித மதினாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவி ஆகிய பள்ளிகளில் இனி போட்டோ, வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசின் ஒகாஸ் பத்திரிக்கையை மேற்கோள்காட்டி அல் மிஸ்ர் அல் யவ்ம் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.


புனிதப் பள்ளிகளின் புனிதத்தன்மையை போற்றும் நோக்குடன் இத்தடை விதிக்கப்படுவதாக சவுதி அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மீறுபவர்களின் புகைப்பட, வீடியோ காமிராக்கள், மொபைல்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.



இத்தடை சம்பந்தமாக அனைத்து ஹஜ் உம்ரா ஏற்பாட்டாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.



Source: NewsNow
தமிழில்: நம்ம ஊரான்

Post a Comment

0 Comments