உலகில் வேறு எந்த பானங்களையும்விட, அதிகமாகப் பருகப்படும் பானம் தேனீர் (டீ) தான். மனிதன் தேனீர் பருகி 5 ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. உலக பானமான தேனீர் கண்டுபிடிக்கப்பட்டது சுவையான கதை. இந்த வாரம் தேனீரின் அருமை பெருமைகளை அசைபோடுவோம்...
* சீனா, இந்தியா உள்ளிட்ட கிழக்கத்திய நாடுகளில் 5 ஆயிரம் ஆண்டுகளாக தேனீர் (டீ) பருகப்பட்டாலும், மேற்கத்திய நாடுகளில் கடந்த 400 ஆண்டுகளில்தான் தேனீர் பருகப்படுகிறது. குறிப்பாக கடந்த இரு நூற்றாண்டுகளில் தான் உலகில் தேனீர் பயன்பாடு பல மடங்கு பெருகியது. இப்போது உலகம் முழுக்க மூலை முடுக்குகளிலெல்லாம் தேனீர் கடைகள் முளைத்துவிட்டன.
* தேனீரை முதன் முதலில் தயாரித்தவர் சீன பேரரசர் ஷென் நங் என்பவர் ஆவார். கி.மு. 2737–ம் ஆண்டு ஒருமுறை தண்ணீரை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தார். அப்போது வீசிய காற்றில் பறந்து வந்த சில தேயிலைகள் வென்னீரில் விழுந்தன. அதை அவர் சுவைத்துப் பார்த்தார், அந்தச் சுவை பிடித்துப்போனதால் மீண்டும் அந்த இலைகளை சேகரித்து தேனீர் தயாரித்து பருகினார். உலகிற்கு தேனீர் பானம் கிடைத்தது.
* டீ என்ற வார்த்தை, சீன மொழிச் சொல்லில் இருந்து உருவானதாகும். வட்டார மொழிச் சொல்லில் தேயிலைச் செடியை டீ ( t ) என்று வழங்கினார்கள். அதில் இருந்தே டீ (ஜிமீணீ) என்ற ஆங்கிலச் சொல் பிறந்தது. மாண்டரின் மொழியில் ‘சா’ என்ற சொல்லும் தேயிலைச் செடியைக் குறிக்கும். இதிலிருந்து பிறந்ததுதான் தேனீரைக் குறிக்கும், ‘சாய், சாயா’ போன்ற வார்த்தைகளாகும்.
* ஒரு பவுண்டு (45 கிராம்) எடையுள்ள தேயிலை பாக்கெட் தயாரிக்க 2 ஆயிரம் தேயிலை இலைகள் தேவைப்படும். ஒரு தேயிலைத் தாவரம், 3 ஆண்டுகள் வளர்ச்சி அடைந்த பிறகுதான், தேனீர் தயாரிக்கத் தகுதியான தேயிலைகளைத் தரும். தேயிலை ஒரு காட்டுச் செடி என்றாலும், நாம் பருகும் பெரும்பாலான தேனீர், பண்ணைத் தோட்டத்தில் விளைவிக்கப்படும் தேயிலையில் இருந்து தயாரிக்கப்படுவதாகும்.
* காபி மற்றும் சோடாவில் உள்ள காபீனைவிட, தேனீரில் உள்ள காபீன் உடலால் மிக மெதுவாக உட்கிரகிக்கப்படுகிறது. காபி குடிப்பதால் உடனடி புத்துணர்வை உணரலாம், ஆனால் தேனீரின் காபின் மெதுவாக கிரகிக்கப்படுவதால் தேனீர் நீண்ட நேரம் உடலுக்கு புத்துணர்வு தரக்கூடியது.
* பல வகையில் தேனீர் தயாரிக்கப்படுகிறது. கருப்பு டீ, ஒயிட் தேனீர், கிரீன் டி, பதனிட்ட டீ ஆகியவை உலக அளவில் பரவலாக பயன்படுத்தப்படும் பொதுவான தேனீர்களாகும். ஆனால் டீ மாஸ்டர்கள் போடும் விதத்தால் உலகெங்கிலும் 1500 வகையில் டீ தயாரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
* தேயிலையின் அறிவியல் பெயர் கேமில்லியா சினென்சிஸ். தேயிலை பற்றிய படிப்பின் பெயர் டாஸ்ஸியோகிராபி.
* தேயிலையை அறை வெப்பநிலையில், மூடப்பட்ட டப்பாவில், ஒளிபடாத இடத்தில் பாதுகாப்பது சிறப்பானது. இல்லாவிட்டால் அவற்றின் சுவையில் மாற்றம் ஏற்படும். தேயிலையின் அருகே வேறு நறுமண பொருட்களை வைத்தால் அவற்றின் மணத்தையும், சுவையையும் தேயிலை உறிஞ்சிக் கொள்ளும்.
* 1904–ல் அமெரிக்காவில் நடந்த செயின்ட் லூயிஸ் உலக கண்காட்சியில் ஐஸ் டீ அறிமுகம் செய்யப்பட்டது. தேனீர் விற்பனையாளர் ரிச்சர்டு பிளிச்சின்டென் இதை விற்பனைக்கு கொண்டு வந்தார். ஆனால் ஐஸ் டீயை முதன் முதலில் தயாரித்தவர் வேறு ஒருவர் என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் பருகப்படும் ஐஸ் டீயில் 75 சதவீதம் அமெரிக்கர்களால் பருகப்படுகிறது. சிறுபையில் அடைக்கப்படும் டீ டேக் அறிமுகம் செய்யப்பட்டது அமெரிக்காவில்தான்.
* அமெரிக்காவில் நடைபெறும் ‘பாஸ்டன் டீ பார்ட்டி’ என்ற தேனீர் விருந்து உலகப் புகழ் பெற்றதாகும். 1773–ம் ஆண்டு டிசம்பர் 16–ம் தேதி இந்த தேனீர் விருந்து முதன் முதலாக நடந்தது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகத் திரண்ட, சுதந்திர குழுக்கள் இந்த பிரமாண்ட தேனீர் விருந்தை நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
* வெப்பமும், ஈரப்பதமும் மிகுந்த மலைப்பாங்கான பகுதியில்தான் தேயிலைச் செடி விளையும். 50 முதல் 85 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை தேயிலை வளர ஏற்றது. இலங்கை, சீனாவின் வெய், இந்தியாவின் டார்ஜிலிங் போன்ற பகுதியில் உலகின் பிரபலமான தேயிலைகள் விளைகின்றன. இவை சுமார் 4 ஆயிரம் அடி உயரமான மலைப்பகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
* ஒரு புள்ளிவிவரத்தின்படி கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் தேனீர் பயன்பாடு 156 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் மில்லியன் டன் தேயிலை உலகம் முழுவதும் அறுவடை செய்து பயன்படுத்தப்படுகிறது.
* உலகில் அதிகமாக தேயிலை உற்பத்தி செய்வது சீனா. இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
* சீனாவில், விருந்தினர்களுக்கு தேனீர் உபசரிப்பு சிறப்பாக இருக்கும். தேனீரின் சிறப்பை புகழ்வதற்காக விருந்தினர், மேஜையில் விரலால் தட்டி ஓசை எழுப்புகிறார்கள். எத்தனை முறை அவர் மேஜையை தட்டுகிறாரோ தேனீர் அவ்வளவு சிறப்புடையது என்று அர்த்தமாகும்.
தேனீரில் சத்து இருக்கிறதா?
தேனீர் வெறும் பானம், அதில் எந்த சத்துமில்லை, தேனீர் குடிப்பது ஒரு அவசியமற்ற தீய பழக்கம் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள். கீரீன் டீ மட்டுமே ஆரோக்கியம் தரும் என்றும் நம்பாதீர்கள். அனைத்துவிதமான தேயிலையிலும் பிளோவனாய்டு, பாலிபினால்ஸ் போன்ற உடலுக்கு அவசியமான வேதிப்பொருட்கள் உள்ளன. இவை புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளைத் தடுக்கும் நோய்எதிர் பொருளாக செயல்படக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
தேயிலை நாணயம்...
ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் தேனீர்தான் தேசிய பானமாகும். சைபீரியாவில் தேயிலைக் கட்டியை நாணயம் போல பயன்படுத்தினார்கள். உலகிலேயே அதிகமாக தேனீர் பருகுபவர்கள் அயர்லாந்து நாட்டினர். இரண்டாவது இடம் இங்கிலாந்திற்கு.
0 Comments