ஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபராதங்களை கட்ட கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அமீரகம் முழுவதும் போக்குவரத்து அபராதங்களை தள்ளுபடி சலுகையில் கட்ட அனைத்து எமிரேட்டுகளும் தனித்தனியான கால அவசாகங்கள் மற்றும் தள்ளுபடி சதவீதங்களில் ஏற்ற இறக்கங்களுடன் அறிவித்து வந்தன.
இவற்றை எல்லாம் ஒருமுகப்படுத்தி அமீரகம் முழுவதும் 50% தள்ளுபடி சலுகையில் 2017 டிசம்பா 31 ஆம் தேதி வரை போக்குவரத்து அபராதங்களை கட்ட அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ராணுவத்தின் துணைத் தலைவருமான ஷேக் முஹமது பின் ஜாயித் அல் நஹ்யான் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த 50% தள்ளுபடி சலுகையை எதிர்வரும் 2018 பிப்ரவரி 28 வரை கட்ட ஷார்ஜா போலீஸ் அவகாச காலத்தை அதிகரித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த அபராதங்களை உள்துறை அமைச்சகத்தின் செயலி (Interior Ministry App), போலீஸ் நிலையங்கள், டிராபிக் போலீஸ் மையங்கள், தஸ்ஜீல் அவுட்லெட் கவுண்டர்கள் (Tasjeel Outlets) மற்றும் சஹாரா மாலில் உள்ள போலீஸ் சேவை மையத்திலும் கட்டலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments