Subscribe Us

header ads

கற்பிட்டியில் டெங்குக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 25 நபர்களுக்கு தண்டப்பணம் (இனியாவது அவதானமாக இருங்கள்.)


அண்மையில் கல்பிட்டி சுகாதார அதிகாரி காரியாலயத்தின் ஏற்பாட்டில்மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு நிகழ்வின் போது வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் கண்டு பிடிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் சின்னக்குடியிருப்பு,பெறியகுடியிருப்பு,புதுக்குடியிருப்பைச்சேர்ந்த 25 நபர்கள் கடந்த 11-12-2017 அன்று நீதி மன்றத்தில் தலா மூவாயிரம் ரூபாய் (3000/=) வீதம் தண்டப்பணம் செலுத்தினர்.

இத்தண்டப்பணம் எதிர் வரும் காலங்களில் அதிகரிக்கப்படலாம் ஆகவே அவதானமாக இருங்கள்.

சுற்றுப்புறசூலலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

இதில் அதிகமானவர்கள் சிவப்பு எச்சரிக்கையை அலட்சியம் செய்தவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

-Rizvi Hussain-

Post a Comment

0 Comments