வருடாந்தம் 6.5 மில்லியன் சினிமா டிக்கெட்டுகள் ஒன்லைன் வழியாக பஹ்ரைனில் பதிவு செய்யப்படுகின்றது இதில் 5 மில்லியன் டிக்கெட்டுகள் சவூதி அரேபிய மக்களால் பதிவு செய்யப்படுகின்றவை.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 4 மில்லியன் டிக்கெட்டுகள் ஒன்லைன் வழியாக பதிவு செய்யப்படுகின்றன இதில் 3.7 மில்லியன் டிக்கெட்டுகள் சவூதி அரேபிய மக்களால் முற்பதிவு செய்யப்படுகின்றவை.
2017ல் சவூதி அரேபியாவில் உள்ள ரெட் சி மோலுக்கு மட்டும் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 18 மில்லியன் பேர், இந்த தொகையை 2018ல் 21 மில்லியனாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது இந்த மோலில்தான் 12 திரையரங்கங்கள் அமைக்கவிடவிருக்கின்றன.
சவூதி முழுவதும் அமைக்கப்படவிருக்கும் 300 திரையரங்கங்கள் வழியாக பல்லாயிரம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் சவூதி அரேபியர்கள் தொழில் வாய்ப்பை பெற சந்தர்ப்பம் வழங்கப்படிருக்கின்றது.
இவை அனைத்தும் சவூதி அரேபியாவின் பொருளாதார இலக்கான விஷன் 2030 ஐ நோக்கிய பயணம் என சவூதி அரேபிய ஆட்சியாளர்களால் சொல்லப்படுகின்றது.
தமது நாட்டிலிருக்கும் பணம் விரயமாக அந்நிய நாடுகளுக்கு சென்று சேர்வதை விட அதை தமது நாட்டுக்கு உபயோகமாக்கவே ஆட்சியாளர்கள் திட்டமிடுகிறார்கள் அதை தவறென்று நாம் கூறிவிட முடியாது, நமது நாடுகளை பொறுத்தவரை ஒரு செயலை செய்வதற்கு வாய்ப்பும், வசதியும் இல்லாவிட்டால் அந்த செயலை நாம் செய்ய முடியாது ஆனால் அரபு நாடுகளை பொறுத்தவரையில் ஒரு செயலை செய்ய அவர்களின் நாட்டில் வசதியும் வாய்ப்பும் இல்லாவிட்டால் விமானமேறி சென்று அந்த செயலை அடுத்த நாட்டில் செய்வார்கள் இதை ஆட்சியாளர்களும் தடுக்க முடியாது சட்டமும் போட முடியாது.
ஒவ்வொரு தனி மனிதனும் திருந்தாதவரை எந்த இறுக்கமான சட்டம் போட்டும் எந்தவொரு மனிதனையும் தடுக்க முடியாது அப்படி தடுக்க வேண்டுமானால் ஒரேயொரு முறையில் தடுக்கலாம் அது..,
சவூதி குடிமக்களின் கடவுச்சீட்டுகளை முடக்கி, எல்லைகளை மூடி, நாட்டுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் அவர்களை சிறைக்கைதியாக வைப்பதன் மூலம் மட்டும் அதை சாதிக்கலாம்.
ஆனால்..,
அப்படி செய்வது முடியாத ஒன்று ஆதலினால் கால ஓட்டத்திற்கு தகுந்த மாதிரி நடைமுறைகளிலும் மாற்றத்தை கொண்டு வரத்தான் வேண்டும்.
0 Comments