ஜனவரி 1 ஆம் தேதி அன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் துபை ஃபிரேம் பில்டிங்
போட்டோ ஃபிரேம் வடிவில் துபையில் கட்டப்பட்டு வந்து சுற்றுலா முக்கியத்துவம் மிகுந்த கட்டிடம் 'BERWAZ DUBAI' 2018 ஜனவரி 1 ஆம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறது.
இந்த ஃபிரேம் பில்டிங் உச்சியிலிருந்து பழைய துபையின் கட்டிடங்கள், வின்னைத் தொடும் புதிய துபையின் கட்டிடங்கள் மற்றும் கட்டப்பட்டு வரும் அதிநவீன கட்டிடங்கள் என துபையின் கலாச்சார பிம்பங்களை 360 டிகிரி கோணத்தில் ரசிக்கலாம்.
மேலும், தரை தளத்தில் டான்சிங் பவுண்டைன் எனப்படும் இசைக்கேற்ப நடனமாடு நீர்வீழ்ச்சி அமைப்புக்கள் மற்றும் மியூசியம் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.
பெரியவர்களுக்கு 50 திர்ஹமும், குழந்தைகளுக்கு 30 திர்ஹமும் நுழைவு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 3 வயதிற்கு கீழள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். முதியவர்கள் மற்றும் பிறர் உதவி தேவையுடைய மாற்றுத் திறனாளிகளுக்கும் அவருக்கு (2 பேர் வரை) துணையாக வருபவருக்கும் இலவசம்.
ஜபீல் பார்க் அருகே அமைந்துள்ள இந்த ஃபிரேம் பில்டிங்கை அல் ஜாஃபிலியா மெட்ரோ அல்லது பஸ் நிறுத்தங்களில் இறங்கி சென்றடையலாம். வாகனம் வைத்திருப்போர் அல் ஜபீல் பார்க் கேட் எண்: 1 அருகே அமைந்துள்ள கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வரலாம்.
பார்வை நேரம்: தினசரி காலை 10 மணிமுதல் மாலை 7 மணிவரை
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
0 Comments