Subscribe Us

header ads

கல்பிட்டி நகரில் காணப்படும் நவீனக்கடைத்தொகுதி பிரதேச சபை ஊழியர்களால் சுத்திகரிப்பு


கல்பிட்டி நகரில் காணப்படும் நவீனக்கடைத்தெகுதி பகுதி மிகவும் மோஷமான நிலையில் கழிவுகள் கொட்டப்பட்டு தூர் நாற்றமும் வீசுவதாக கல்பிட்டி பிரதேச சபை செயலாளரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக (நேற்று)ஹப்னாஸின் மேற்பார்வையில் பிரதேச சபை ஊழியர்களால் சுத்தம் செய்யப்பட்டது.
இருந்தாலும் இப்பகுதி அடிக்கடி இவ்வாறு காணப்படுவதாகவும் நாம் கிழமைக்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டியிருப்பதாகவும் அன்மையில் உள்ள கடை உரிமையாளர்கள் நினைத்தால் தான் இதை சிறந்த முறையில் பராமறிக்க முடியும் என்றும் இன்று துப்புரவு செய்ய நாளை அல்லது இன்று இரவே குப்பைகளை கொட்டுகிரார்கள் என்று வேதனையுடன் துப்புரவு செய்யும் ஊழியர்கள் கூறினார்கள்.
எமது நகரை அழகாகவும் சுத்தமாகவும் வைத்துக்கொள்வது பிரதேச சபை செயலாளரின் ,ஊழியர்களின் கடமை மாத்திரமல்ல எமது கடமையும் கூட என்பதை உணர்ந்து இப்பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் தவிர்த்து அழகான சுத்தமான கல்பிட்டி நகரை உருவாக்கும் பிரதேச சபை செயலாளரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
மக்கள் கோறிக்கைக்கு உடனடி நடவடிக்கை மேற்கொண்ட பிரதேச செயலாளர் மங்கள ராமநாயக்க அவர்களுக்கு ,கல்பிட்டி பிரதேச சபையில் கடமையாற்றும் ஹப்னாஸ் அவர்களுக்கும் ,ஊழியர்களுக்கும் ஆட்டோ சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

-Rizvi Hussain-

















Post a Comment

0 Comments