Subscribe Us

header ads

சவுதி அரேபியா இக்கட்டுக்குள் சிக்கியிருக்கிறது மர்மங்கள் தொடரக்கூடும்..முடிச்சுகளும் அவிழக்கூடும்


லெபனான் பிரதமரான சாத் ஹரீரீ அவசரமாக சவுதி அரேபியாவுக்கு அழைக்கப்படுகிறார்.

சவுதி அரேபியாவுக்கு வந்து சில மணித்தியாளங்களில் அவரோடு வந்த உதவியாளர்களே அறியாத ஒரு இடத்தில் இருந்து சவுதி அரேபியாவின் அல் அரேபியா தொலைக்காட்சி ஊடாக தான் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக லெபனான் மக்களுக்கு அறிவிக்கிறார்.

ஹரீரீ சவுதி சார்பானவராக அறியப்பட்டவர். சவுதி- லெபனான் இரட்டை குடியுரிமை பெற்றவர். இவரது கட்சிக்கும் ஹிஸ்புல்லாஹ் சார்பான கட்சிக்கும் இடையிலான தேசிய அரசாங்கமே லெபனானில் இருக்கிறது. அதில் ஜனாதிபதி ஆரோன் ஈரான் சார்பானவர். பிரதமர் ஹரீரீ சவுதி சார்பானவர். 

தனது இராஜினாமாவுக்கு ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார்.


இவர் இராஜினாமா செய்து சில மணித்தியாளங்களில் யெமனில் இருந்து ஹூத்திகள் ரியாத் நோக்கி பலஸ்டிக் ஏவுகணைகள் ஏவுகிறார்கள். ஏவுகளைகள் எதுவும் தரையில் வெடிக்கவில்லை. அவை அனைத்தும் வானில் வைத்து இடைமறிக்கப்பட்டன.

ஆனாலும் சில மணித்தியாளங்களில் தரையில் வேறொரு ஏவுகணை வெடித்தது. அதிகாரமிக்க மற்றும் பணபலம் பொருந்திய இளவரசர்கள் உட்பட பல முக்கிய புள்ளிகள் ஊழல் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து கைது செய்யப்படுகிறார்கள்.

இவர்கள் கைது செய்யப்பட்டு சில மணித்தியாளங்களில் இளவரசர் மக்ரீன் உட்பட முக்கிய புள்ளிகள் பயணம் செய்த ஹெலிகொப்டர் யெமன் எல்லையில் "விபத்துக்குள்ளாகியிருக்கிறது".

48 மணித்தியாளத்திற்குள் நடந்து முடிந்திருக்கும் இந்த சம்பங்கள் மூலம் சவுதி அரேபியா நாட்டுக்குள்ளும் நாட்டுக்கு வெளியிலும் ஒரு இக்கட்டுக்குள் சிக்கியிருக்கிறது என்பதை மட்டும் உணர்த்துகிறது.

மர்மங்கள் தொடரக்கூடும்..முடிச்சுகளும் அவிழக்கூடும்

Dilsha Mohamed

Post a Comment

0 Comments