முந்திய செய்தி : கல்பிட்டி நகரில் காணப்படும் நவீனக்கடைத்தொகுதி பிரதேச சபை ஊழியர்களால் சுத்திகரிப்பு
பிரதேச சபை ஊழியர்கள் என்ன உங்கள் வீட்டு வேலக்காரர்களா? நேற்று முகம் சுழிக்காமல் தனது கடமை என்பதற்காக தூர் நாற்றத்திற்கு மத்தியில் சிரமம் பாராமல் கல்பிட்டி பிரதேச சபை ஊழியர்கள் சுத்தம் செய்தார்கள்.
அவர்கள் சொன்னது போல் சுத்தம் செய்து ஒரு நாள் முடிவதற்கும் முன் தற்போது யாரோ ஐந்தறிவுள்ளவர் மீன்கள் வெட்டப்பட்ட கழிவுகள், நாற்றமடிக்கும் கழிவுகளை நவீன சந்தை கடைத்தொகுதி பகுதியில் கொட்டியுள்ளார்கள்.
இவ்வாறானவர்களை என்ன செய்வது இவர்கள் சட்டத்திற்கு விரோதமாக,மனசாட்சியே இல்லாமல் முகம் சுழிக்கக்கூடிய கழிவுகளை இது குப்பை தொட்டி போல் கொட்டுவார்கள். பிரதேச சபை ஊழியர்கள் சுத்தம் செய்ய வேண்டுமா? மக்கள் விசனம்.
-Rizvi Hussain-
0 Comments