கல்பிட்டியின் சிறந்த வீரர்களும் நீங்களே ,அதே போல் எதுவாக இருந்தாலும் ஊருக்காக முன்னின்று போராடி நிரூபித்துக்காட்டியவர்களும் நீங்களே ,அதே போல் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் உங்கள் முன்
டெங்குக்கு எதிராக எமதூரில் எதிர் வரும் திங்கள் கிழமை நடாத்தப்படும் சிரமதானபணி சம்பந்தமாக எவ்வாறு முன்னெடுத்து செல்வது சம்பந்தமன உங்களது பெருமதியான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் முகமாக நாளை அதாவது சனிக்கிழமை (25/11/2017) இன்று இரவு 8.00 மணிக்கு கல்பிட்டி பிரதேச சபை கட்டிடத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஆகவே கல்பிட்டியிலுள்ள அனைத்து விளையாட்டு கழக இளைஞர்கள்,இளைஞர்கழக சங்க உறுப்பினர்கள் ஆட்டோ சங்க இளைஞர்கள்,அதே போல் கல்பிட்டியிலுள்ள நலன் விரும்பிகளான அனைத்து இளைஞர்களை அவசியம் தவராது கலந்து கொள்ளுமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றேன்.
எடுத்து வைப்பது ஒரு அடியாக இருந்தாலும் அடைவது சிகரமாக இருக்கட்டும்.


0 Comments