Subscribe Us

header ads

கல்பிட்டியில் எதிர்வரும் திங்கள் கிழமை ஊர் தழுவிய ஒரு நாள் டெங்கு ஒழிப்பு நிகழ்வு ஏற்பாடு


( 23/11/2017) கல்பிட்டி பிரதேச செயலகத்தில் அரச நிறுவன பிரதிகள் ,அரசியல் வாதிகள் அதே போல் கல்பிட்டி பிரஜைகள் குழு ஆகியோரின் பங்களிப்பில் டெங்கு ஒழிப்பு வேளத்திட்டத்தின் அவசியம் சம்பந்தமாகவும் எவ்வாறு அரச நிறுவன பிரதி நிதிகள் செயல்படுவது பொது மக்கள் அவர்களது பங்களிப்பை எவ்வாறு செயல்படுத்தவேண்டும்,முக்கியமாக எமது ஊரின் உயிர் நாடியாகக்காணப்படும் இளைஞர்களை எவ்வாறு செயல்படுத்துவது அதே போல் சிரமதானம் நடைபெரும் திகதி போன்றவை இது தற்போதைய பிரதான தேவை என்பதனால் சுமூகமான முறையில் உரையாடப்பட்டு எல்லா நாளும் ஒவ்வொருவருக்கு வேலை நாட்களாகவே காணப்படுவதனால் காலம் தாழ்த்தாமல் அவசரமாக செயல்படுத்த பட வேண்டியுள்ளதினால் எதிர் வரும் திங்கள் கிழமை இறுதி நாளாக முடிவு செய்யப்பட்டது.

ஆகவே எதாவதது செய்யப்போகும் போது தான் எங்களுக்கு அந்த நாளில் முக்கியமான வேளைகளும் தேவைகளும் வரும் எனவே எமக்காகவும் எமது உறவுகளுக்காகவும் ஒரு நாளை ஒதுக்கி இவ்வேளைத்திட்டம் கல்பிட்டியில் டெங்குவை ஒழிப்பதற்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவோம்.
வரும் முன் காப்போம்
எமது உறவுகளுக்காக ஒரு நாளை ஒதுக்குவோம்
ஒன்றுபடுவோம் டெங்குவிடமிருந்து வெற்றிபருவோம்.

-Rizvi Hussain-















Post a Comment

0 Comments