Subscribe Us

header ads

அல்-அக்சா தேசிய பாடசாலையின் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது


இன்று (21/10/2017) சனிக்கிழமை பி.ப.4.00 மணிக்கு எமது கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் புத்தளம் தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் M.N.M.நஸ்மி அவர்களின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி அமைச்சருமான கெளரவ அகில விராஜ் காரியவசம் அவர்களின் கல்வி அமைச்சானது மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுத்துகின்ற அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை தேசிய வேலைத்திட்டத்தின் மூலமாக பாடசாலை அபிவிருத்தி நிதியின் கீழ் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை உறுப்பினர்கள்,முன்னால் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்கள் மேலும் விஷேட அதிதிகள் கலந்து சிறப்பிக்கவுள்ளதால் எமது பாடசாலையின் அபிவிருத்தி வேலை திட்டம் என்ற வகையில் பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் பாடசாலை நலன் விரும்பிகள் அனைவரையும் கலநது சிறப்பிக்குமாரு அன்போடு அழைக்கின்றோம்.

Post a Comment

0 Comments