கல்பிட்டி பிரதேச சபை செயலாளர் மங்கல ராமநாயக்க அவர்களின் ஆலோசனையில் பிரதான முகாவமத்துவ உதவியாளர் M.T.ஹாஜித் அவர்களின் தலைமையில் கல்பிட்டியிலுள்ள முப்படையினர், சங்கங்கள் ,அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்விக்காரியாலம், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலம், போன்றவை இணைந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22/10/2017 அன்று காலை 10.00 மணி தொடக்கம் பி.ப.2.00 மணி வரை பாலாவி தொடக்கம் கல்பிட்டி வரையிலான பிரதான வீதிகள் இரு ஓரங்களிலும் காணப்படும் பிளாஸ்டிக்,பொலித்தீன் போன்றவைகளை அகற்றி சுத்தப்படுத்துவதுடன் இதனால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு சம்பந்தமாக அருகில் வசிக்கும் மக்களை விழிப்புணர்வு செய்தலும் , இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிப்பதும் இப்பொருட்கள் பாவனை தற்போது தடை செய்யப்பட்டுள்ளன என்பதை மக்களுக்கு எடுத்து கூறுவது சம்பந்தமாகவும் இச்சிரமதான பணியில் அனைத்து உறுப்பினர்களையும் பொது மக்களையும் பங்குபெறச்செய்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் கல்பிட்டி பிரதேச சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
-Rizvi Hussain-
0 Comments