கடந்த மாதத்தில் வால்மார்ட் நிறுவனம், இணையதளத்தில் ‘ஆர்டர்’ கொடுத்த பொருட்களை சம்பந்தப்பட்ட முகவரியில் ஆள் இல்லாவிட்டாலும் வீட்டைத் திறந்து பொருளை வைத்துவிட்டு வரும் முறையை பரிசோதித்துப் பார்த்தது.
அவர்கள் ‘ஒன்டைம் பாஸ்வேர்டு’ எனும் யுத்தியில் வினியோகிப்பவர் ஒரு முறை மட்டுமே வீட்டிற்குள் நுழையும் வசதியை அறிமுகம் செய்தனர்.
உலகின் மிகப்பெரும் இணையதள வர்த்தக நிறுவனமான அமேசான் இதில் மேலும் பல புதுமைகளைப் புகுத்தி ஆளில்லா நேரத்திலும் பொருட்களை வினியோகம் செய்யும் முறையை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.
இவர்கள் கிளவுட் நுட்பத்துடன் கூடிய கேமரா, எலக்ட்ரானிக் பூட்டு ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
சரியான டிரைவர் சரியான முகவரிக்குச் செல்கிறாரா என்பதை கண்காணிக்கிறார்கள்.
பாஸ்வேர்டு இல்லாமல் வாசலை அடைந்ததும் வீட்டுக்காரர் ஓகே என்று அனுமதி வழங்கியதும் உள்ளே செல்லவும், அந்த வீடியோ செல்போனில் பதிவாகும் முறையையும் அறிமுகம் செய்துள்ளனர்.
‘அமேசான் கீ’ எனப்படும் இந்த நுட்பம் வீட்டின் பாதுகாப்பையும் பலமடங்கு அதிகப்படுத்துகிறது.
இந்த திட்டத்தில் சேர 250 அமெரிக்க டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
நவம்பர் 8-ந் தேதி முதல் அமெரிக்காவின் 37 நகரங்களில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறது அமேசான்.
0 Comments