இன்று ஞானசார தேரருக்கு விளக்கமளிக்க முனையும் அகிலஇலங்கை ஜம்மியதுல் உலமா அன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸ காலத்தில் எவ்வாறான விளக்கங்களை வழங்கியதுஎன்பதை விளக்க வேண்டுமென முன்னாள் பானதுறை பிரதேச சபைதலைவர் இபாஸ் நபுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவத் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இன்று அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை ஞானசாரதேரருக்கு இஸ்லாம் பற்றிய விளக்கமளித்து வருவதாக தனது ஊடகஅறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளது.ஞானசாரசார தேரருக்குஇஸ்லாம் பற்றி விளக்கமளிப்பது எப்போதே நடந்திருக்க வேண்டியவிடயம். இப்போது அவர் பொறியில் இறுகியுள்ள சந்தர்ப்பத்தில்நடாத்தவேண்டிய தேவை என்னவுள்ளது? அன்று முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இவ்வாறான என்னமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இவர்கள் இஸ்லாம் பற்றி விளக்கமளித்துவரும் சமகாலப்பகுதியிலேயே அவர் முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துக்களைஊடகவியலாளர் மாநாடு நடாத்தி கூறி வருகிறார்.அவர்திருந்திவிடுவார் என்ற ஒரு சிறு சமிஞ்சையையாவதுகாட்டியிருந்தால் இது பற்றி சிந்தித்திருக்கலாம். அல்லது அவர் சிலவிடயங்கள் குறித்து அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்கவிவாதத்து அழைத்திருந்தார் அப்போதாவது உலமா சபைசென்றிருக்கலாம்.
இப்போது அவருடன் பேச்சுக்கு செல்வது, அவரை காப்பாற்றும்முயற்சியாக பார்ப்பத் தவிர வேறு கோணத்தில் பார்க்கமுடியாதுள்ளது. அவர் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சுக்கருத்துக்களை பேரின மக்களிடத்தில் விதைத்துள்ளார்.
அவைகளை பேரின மக்களின் உள்ளங்களில் இருந்து கூட்டி சுத்தம்செய்ய வேண்டிய தேவை உள்ளது. இதற்கு அவர் தனது கருத்துக்களைபிழையென பகிரங்கமாக ஏற்க வேண்டும். இதன் பின்னால் இருந்தசக்திகள் பற்றி வெளிப்படுத்த வேண்டும். அவர் அவ்வாறு செய்வாராகஇருந்தால் நாம் அவரருடன் சமரசம் பேசலாம் அதேநேரம் அவரின்நீதி மன்ற விடயங்கள் தொடர்பில் நாம் தலையிடமுடியாது.அவ்வாறில்லாமல் அவரின் பிடியை விடுவிப்பது ஆபத்தானவிளைவுகளை ஏற்படுத்தும்.
இன்று ஞானசாரவுடன் பேச்சுக்கு செல்லும் முஸ்லிம் குழுவினர்,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில்விண்னுலகிலா இருந்தார்கள். ஏன் அன்று ஒரு நீதி, இன்று ஒரு நீதி?முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்திலும் இவ்வாறானமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் பிரச்சினைகள்குறைவடைந்திருக்கலாம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடைய காலத்தில்பிரச்சினைகள் தீர்க்கப்படாமைக்கு முஸ்லிம்களும் ஒரு காரணம்என்பதை இவற்றினூடாக அறிந்துகொள்ளலாம்.
0 Comments