Subscribe Us

header ads

பொதுபலவை மஹிந்த உருவாக்கியதாக கூறிவிட்டு ஆஸாத் சாலி ஏன் ஞானசாரவுடன் சமரசம் பேச வேண்டும்..


மஹிந்த காலத்தில் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றி குளிர் காய்ந்தஅஸாத் சாலி போன்றவர்கள் இன்று அந்த நெருப்பை அணைக்கநாடகமாடுவது தொடர்பில் மக்கள் மிக அவதானமாக இருக்கவேண்டும்.

தற்போது முஸ்லிம் குழுவினர் ஞானசார தேரருடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளதுயார்என்ன முயற்சிகளை மேற்கொண்டாவது பிரச்சினை முடிந்தால்சிறந்ததேஇருந்தாலும் ஞானசார தேரருடன் பேச்சு வார்த்தைக்குசெல்ல வேண்டிய தேவையும் பிரயோசமும் இல்லை என்பதேபெருபாலானாவர்களின் கருத்தாகும்.

பேச்சு வார்த்தை என்பது சிறந்த கொள்கைகளில் உள நோக்கோடுமுரண்படுபவர்களுக்கே பொருந்தும்.அவர்கள் தான் உடன்பாடானவிடயங்களை ஏற்றுக்கொள்வார்கள்ஞானசார தேரர் சிலகாரணங்களை முன்னிறுத்தி ஏவப்பட்ட ஒரு அம்புவெளிநாட்டுசக்திகளின்  நிகழ்ச்சி நிரல்களை இவர் அரங்கேற்றி கொண்டிருக்கிறார்.இவருடன் பேச்சுக்கு செல்வதன் மூலம் எந்த பயனும்கிட்டப்போவதில்லை.

சைட்டம் போன்ற பிரச்சினைகள் தான் உட்கார்ந்து பேச வேண்டியவிடயங்கள்.அது தொடர்பில் போராட்டம் நடாத்தினால் தடையும்மீறினால் அடிஎந்த வித நியாயமான காரணங்களுமின்றிபிரச்சினைகளைத் தூண்டுவதை அடிப்படையாக கொண்டுஆர்ப்பாட்டம் நடாத்தும் இனவாதிகளுடன் முஸ்லிம் குழுவினர் பேச்சுவார்த்தை நடாத்துவதென்றால் இவ்வரசு எதற்கு?ஏன் இவ்வரசால்கட்டுப்படுத்த முடியாதுஞானசாரரை காப்பாற்றுவதாக கூறும்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனை கூடஇவ்வரசால் கைது செய்ய முடியும்.

இதனை இந்த அரசினால் ௧ட்டுப்படுத்த முடியாது என அசாத்சாலிபோன்றோர் ஏற்றுக்கொண்டால் இதில் ஓரளவு நியாயம் இருப்பதாககூறலாம்இவ் விடயத்தில் கூட,அசாத்சாலி இவ்வரசை புகழமுனைவதனூடாக மக்களுக்கு என்ன சொல்ல வருகிறார் எனபுரியவில்லை

முன்னாள் ஜனாதிபதியும் அவரது சகோதரரும் பொதுபல சேனாவைஉறுவாக்கியதாக கூறிவிட்டு தற்போது ஞானசார தேரருடன் சமரசம்பேசுவதின் ஊடாக பொதுபலயும் மஹிந்தவுக்கும் தொடர்பில்லைஎன்பதை அஸாத் சாலி நிரூபித்து வருகிறார்.

உண்மையில் இதனை வைத்து முன்னாள் ஜனாதிபதி அணியைவிமர்சிப்பதானது அவரது குருட்டு அரசியலை எடுத்துகாட்டுகிறது.இவர் பதவிசுக போக சொறிச்சல்களுக்காகவே இப்படிபேசிக்கொண்டிருக்கின்றார்.

கடந்த காலங்களில் ஞானசார என்கிற நெருப்பை என்னை ஊற்றிஎரியவைத்த அஸாத் சாலி போன்றவர்கள் இந்த விடயத்தில்களமிறங்கியுள்ளமை தொடர்பில் நாம் அவதானமாக இருக்கவேண்டும்.
- அஹமட் -

Post a Comment

0 Comments