வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர்ஹரீஸ்,இவ் இணைப்பை தடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினரைநம்பியுள்ளதாக கூறியுள்ளார்.
இவ்வரசின் பிரதி அமைச்சராக உள்ள ஒருவர் இக் கருத்தை கூறுவதானது,முன்னாள்ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேவையை இலங்கை முஸ்லிம்கள் எந்தளவுஉணர்ந்துள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது.நிழலின் அருமையை வெயில்காலப்பகுதியில் தானே அறிந்துகொள்ளலாம்.
இதே சிந்தனை மாகாண சபை தேர்தல் முறை மாற்றத்தின் போது வந்திருந்தால், குறித்தசட்டத்தை தோற்கடித்திருக்கலாம். தங்களுக்கு எதிரான அச் சட்டம்நிறைவேற்றப்பட்டாலும் பறவாயில்லை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவந்துவிடக் கூடாதென்பது தானே அதன் அடிப்படை நியாயமாக முன்வைக்கப்படுகிறது.
தற்போதைய இவ்வாட்சியில் முஸ்லிம்களுக்கெதிரான பல்வேறு சதித்திட்டங்கள்மேற்கொள்ளப்படுகின்றன. அவைகளை எதிர்க்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவுடன் இணைவதை தவிர வேறு வழியில்லை. இது அரசின் உயர்மட்டத்தினருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ள பிரதி அமைச்சர் ஹரீஸ் நன்கேஅறிவார். அதனடிப்படையில் இப்படியான விடயத்தை கூறியிருக்கலாம்.
அஸாப் அஹமட்,
ஊடக செயலாளர்,
முஸ்லிம் முற்போக்கு முன்னனி.
0 Comments