Subscribe Us

header ads

கட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு பரிசளித்த ஜனாதிபதி


கட்டாரிலிருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி பரிசளித்துள்ளதாக முஸ்லிம்முற்போக்கு முன்னணியின் ஊடக செயலாளர் அஸாப் அஹமட் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கட்டார் நாட்டில் இருந்து நேற்று இலங்கைக்கு மீளதிரும்பியிருந்தார்.இன்று அவரது ஊடக பிரிவானது கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச்செல்லும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்துமாறு அறிவித்துள்ளதுஜனாதிபதிமைத்திரிப்பால சிறி சேனா ஜனாதிபதியாவதற்கு முன்பே மாடுகளை பொலனறுவையில்இருந்து ஏற்றிச் செல்வதை தடுத்த கதைகளும் பரவலாகவே உள்ளன.அன்றேதடுத்தவருக்கு இன்று தடுப்பதொன்றும் பெரிய விடயமல்ல.

அதிகமாக முஸ்லிம்களே மாடுகளை அறுத்துண்பதை வழக்கமாக கொண்டுள்ளதால்இவ்விடயமானது முஸ்லிம்களையே அதிகம் பாதிக்கும் என்பதில் எதுவிதசந்தேகமுமில்லைமாடு அறுத்துண்டுதான் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்றில்லை.இருந்தாலும் முஸ்லிம்களை குறி வைத்து நடக்கும் விடயங்களை ஒரு போதும்ஏற்றுக்கொள்ள முடியாதுஇதனை பராமுகமாக இருக்கும் போது இனவாதிகளுக்கு அதுஉற்சாகமளிப்பதாக அமைந்துவிடும்.

முஸ்லிம்களின் மத கடமைகளான அகீகாஉழ்கிய்யா போன்ற விடயங்களின் போது மாடுஅறுக்க வேண்டிய தேவை உள்ளதுஇலங்கையில் உள்ள அதிகமான இடங்களுக்குஅம்பாறைபொலன்னறுவைதிருகோணமலை போன்ற இடங்களில் இருந்தே மாடுகள்அறுவைக்காக வருகின்றனஇச் சட்டம் அமுலில் வருகின்ற போது இலங்கையில் உள்ளஅதிகமான பிரதேசங்களில் மாடு அறுப்பது குறைவடையும்இச் சட்டம் மறுவடிவமானது,ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன மாடு அறுப்பை தடை செய்துள்ளார் என்பதாகும்இச்சட்டம் முஸ்லிம்களை நேரடியாக பாதிக்கும்.

கட்டார் நாட்டில் இருந்து வந்ததும் முஸ்லிம்களுக்கு எதிரான இவ்விடயத்தை ஜனாதிபதிமைத்திரிப்பால சிறி சேனா செய்திருப்பதானதுமுஸ்லிம் நாடான கட்டார் நாட்டை நோக்கிஅவர் சென்ற நோக்கம் நிறைவேறாததால் முஸ்லிம்களை பழிவாங்கும் நோக்குடனும்இருக்கலாம்உடனடியாக இச் சட்டத்தை ஜனாதிபதி மைத்திரிப்பால சிறி சேனா வாபஸ்பெற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments