கத்தார் வாழ் மாவனல்லை கிரிங்கதெனிய ஜமாத்தினரின் அமைப்பான KJC QATAR அமைப்பானது கடந்த 2 வருட காலமாக தமது ஊர் மற்றும் அங்கத்தவர்களின் நலன் கருதி பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தமது அங்கத்தவர்களை ஒன்றுகூட்டும் ஓர் முயற்சியாக இவ்வருடம் நவம்பர் மாதம் 3ஆம் திகதி கிரிக்கட் சுற்றுப்போட்டி ஒன்றினை KJC QATAR அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
KJC CRICKET BATTLE 2017 போட்டித்தொடர் QATAR ASIAN TOWN WEST END PARK சர்வதேச கிரிக்கட் அரங்கில் காலை 6 மணி தொடக்கம் நடைபெற இருக்கின்றன.இப்போட்டித் தொடரில் RED SIDE, BADHURIYANS,LEXUS,UNITED,MENCHESTER UNITED மற்றும் LUCKY BOYS ஆகிய ஆறு அணிகள் மோதவுள்ளன.
இந்நிகழ்வுக்கு ஒத்ததாக அன்றைய தினம் மாலை 2.30 மணிக்கு மாவனல்லை பதுரியா கல்லூரி பழைய மாணவர்களுக்கும் மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவர்களுக்கும் இடையிலான ஓர் நல்லிணக்க கிரிக்கட் போட்டியையும் KJC அமைப்பினர் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாவனல்லை பதுரியா மற்றும் ஸாஹிரா கல்லூரி பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாரு KJC QATAR ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுக்கின்றனர்.
0 Comments