
இஸ்லாத்தின் ஜம்பெருங் கடமைகளில் ஹஜ் மகத்துவமிக்கதாகும்.நபி இப்றாஹிம் (அலை) அவர்களின் தியாகத்தின் வெளிப்பாடாக இந்த ஹஜ் தினம் நினைவுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ள புத்தளம் மாவட்ட தமிழ்,முஸ்லிம் ஊடகவிலாளர் ஒன்றியத்தின் செயலாளர் தேசமான்ய அல்ஹாஜ்.இர்ஷாத் றஹ்மத்துல்லா இன்றைய தினத்தில் நாட்டு மக்களின் விமோசனத்திற்காக அனைவரும் பிரார்த்திப்போமாக என்று விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த செய்தியில் தெரிவித்துள்ளதாவது –
மனித சமூகத்தின் உள்ளத்தில் தியாக குணம் வருகின்ற போது சகல சந்தர்ப்பங்களிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஏற்படும்.இதன் மூலம் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து நடக்க முடியும்.இறைவனின் கட்டளையினை ஏற்று அதனை நடை முறைப்படுத்த நபி இப்றாஹிம் ( அலை ) முனைந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம்.இநத வரலாறு எமக்கு நல்ல பாடத்தை புகட்டுவதாகவும்,இந்த அடிப்படையில் கொண்டாடப்படும் பெருநாளாக ஹஜ்ஜினை நாம் பார்க்கின்றோம் என மேலும் நினைவுபடுத்தியுள்ள தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா இன்றைய தினத்தில் பெருநாள் கொண்டாடும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தியாகத் திருநாள் வாழ்த்தினை தெரவித்துள்ளார்.
0 Comments