Subscribe Us

header ads

அமைச்சர்களின் தொலைபேசி பாவனைகளுக்கு தடை விதித்த ஜனாதிபதி - மைத்திரிபால சிறிசேன





அமைச்சரவை கூட்டங்களின் போது அமைச்சர்கள் தொலைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

அமைச்சரவை கூட்டங்களின் போது சில அமைச்சர்கள் தனது பேச்சுக்கு செவி கொடுக்காமல் தொலைபேசி பயன்படுத்துவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும் சில அரசாங்க அதிகாரிகள் தொலைபேசியை தவறான முறையில் பயன்படுத்துவதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் கலந்து கொள்ளும் நிகழ்வின் போது அமைச்சர்கள் காதில் வயர்களை மாட்டிக் கொண்டிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments